தற்போதைய கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எல்லா இடங்களிலும் தலைப்புச் செய்திகளாக மாறியுள்ளது. இஸ்லாம் மனித வாழ்வின் எல்லா வகையான பிரச்சினைகளுக்கும் தீர்வை கொண்டுள்ளது. ஒரு முஸ்லீம் தான் எதிர்நோக்கக் கூடிய எல்லா பிரச்சினைகளுக்கும் இஸ்லாத்தை அடிப்படையாகக் கொண்டே தீர்வு தேட வேண்டும். இந்நிலையில் இவ்வகையான நோய்களைப் பற்றிய இஸ்லாத்தின் பார்வையையும் அதற்குறிய வழிகாட்டுதலையும் நாம் சற்று நோக்கலாம்.மேலும் இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும், நேர்வழி காட்டியதாகவும், ரஹ்மத்தாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும், உம்மீது நாம் இறக்கி வைத்திருக்கிறோம். (அன்-நஹ்ல் 89). நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக பூட்டப்பட்ட நகரங்கள், வெறுச்சோடிய வீதிகள், விமான மற்றும் போக்குவருத்து நிலையங்களில் உள்ள பரிசோதனைகள் என்பன பார்பதற்கு பயங்கரமாக இருக்கலாம். ஆனால் தொற்று நோய்களுக்கு முகம்கொடுப்பது என்பது முஸ்லிம்களுக்கு புதியதல்ல. மிகவும் தீவிரமான தொற்று நோய்கள் வரும்போது, அதனை எவ்வாறு முகம்கொடுப்பது என்பது பற்றிய வழிகாட்டுதல்களை இஸ்லாம் ஏற்கனவே வழங்கியுள்ளது. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் கொரோனா வைரஸ் இல்லை என்றாலும், அவர்களுடைய காலத்திலும் தொற்று நோய்கள் இருக்கத்தான் செய்தன.நபி (ஸல்) கூறினார்கள், “நீங்கள் இருக்கும் ஒரு தேசத்தில் தொற்று நோய் பற்றி நீங்கள் அறிந்து கொண்டால், அதிலிருந்து ஓடாதீர்கள்; அது ஒரு குறிப்பிட்ட தேசத்தில் பரவுவதாக நீங்கள் கேள்விப்பட்டால், அந் நிலத்திற்குள் நுழைய வேண்டாம்”. (புகாரி). இந்த ஹதீஸின் இரண்டாம் பகுதி மிகவும் வெளிப்படையானது. ஆனால் முதல் பகுதியை உணர்வது மிகவும் கடினமானது. மிகவும் கொடிய தொற்று நோயை எதிர்கொள்ளும் ஒரு நபரின் இயல்பான மன நிலை அதை விட்டும் தூர ஓடுவதாகும். இருப்பினும் ஓடக்கூடாது என்பதற்கு ஹதீஸ் தெளிவாக உள்ளது. இதை விட்டும் ஒரு நபர் ஓடாமல் இருக்க எது அவரை ஊக்குவிக்கக்கூடும்?நபி (ஸல்) அவர்கள் யாராலும் ஒப்பிட முடியாத அளவிற்கு ஒரு ஊக்கத்தை அளித்தார்கள். அவர் கூறினார்கள், “தொற்று நோய் தான் நாடியவர்களின் மீது அல்லாஹ் அனுப்புகிற வேதனையாக இருந்தது. பிறகு அதை இறை நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் கருணையாக ஆக்கிவிட்டான். எனவே, அந்த நோய் (பரவி) உள்ள ஓர் ஊரில் ஓர் அடியார், தமக்கு அல்லாஹ் எழுதிய விதிப்படியே தவிர எந்த நோயும் தம்மைத் தீண்டாது என உறுதி கொண்டவராக பொறுமையோடும் நன்மையை எதிர்பார்த்தும் அந்த ஊரிலிருந்து வெளியேறாமல் அங்கேயே தங்கியிருந்தால் உயிர்த் தியாகிக்குக் (ஷஹீத்) கிடைக்கும் நன்மையைப் போன்று அவருக்கும் கிடைக்கும் ” (புகாரி )இஸ்லாத்திலிருக்கும் நன்மைகளிள் உயர்ந்த அந்தஸ்தைக் கொண்ட நன்மை {ஹாதாவின் நன்மை. அதற்கு ஒப்பான நன்மையை தொற்று நோய் பீடிக்கப்பட்ட அப்பகுதியை விட்டு வெளியேறாது பொறுமையாக இருப்பவருக்கு வழங்கப்படுகிறது. இது அல்லாஹ்வின் மீதுள்ள பொறுப்புச்சாட்டுதலுடன் (தவக்குலுடன்) தொடர்புடையது. தனது வாழ்க்கையும் மரணமும் அவனுடைய கைகளில் மட்டுமே உள்ளது என்பதை உணர்வதினூடாக மாத்திரமே இதை அடைய முடியும்.இஸ்லாம் தனிமைப்படுத்துதலை மாத்திரம் ஊக்குவிக்க வில்லை. மாறாக நோய் பரவுவதைத் தடுக்கும் அடிப்படை சுகாதாரம் பற்றியும் நுணுக்கமாகவும், விரிவாகவும் வழிகாட்டுகிறது.“அல்லாஹ்வின் தூதர் (ஸல்)தும்மும்போதெல்லாம், தனது கையால் அல்லது ஒரு துணியால் வாயை மூடிக்கொள்வார்…” (திர்மிதி)வுழு, குளிப்பு, கைகளை கழுவுதல் மற்றும் தனிப்பட்ட சுகாதாரம் அனைத்தும் இஸ்லாத்தின் வலுவான அம்சங்கள். “சுத்தம் ஈமானின் பாதி” ஆகவே நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான அடிப்படையை இஸ்லாம் முன் வைக்கிறது.வரமுன் காப்பது குணப்படுத்துவதை விட சிறந்தது.நாம் எதிர் நோக்கும் சிக்கல்கல் அனைத்தும் மனிதனால் உருவாக்கப்பட்டவை.இஸ்லாத்தில் ஹலால் மற்றும் தூய்மை பற்றிய புரிதல் மிகவும் தெளிவாக உள்ளது. இஸ்லாம் நாம் எதை சாப்பிடுகிறோம், எப்படி விவசாயம் செய்கிறோம், கால்நடைகளை எவ்வாறு பராமறிக்கிறோம், மற்ற இடங்களுக்கு எவ்வாறு கொண்டு செல்கிறோம் போன்ற அனைத்தையும் உள்ளடக்கியது. நிச்சயமாக இதில் தெளிவான ஞானம் உள்ளது.ஆனால் இக்கால கட்டத்தில் உள்ள பல நடைமுறைகள் இயல்பான மனித நடவடிக்கையை விட மிகவும் துரமானவை.ஒரு முஸ்லீம் எப்போதும் அல்லாஹ்வின் தண்டனை பற்றிய அச்சத்துடனும், தன்னுடைய இயலாமை பற்றிய தெளிவுடனும் வாழ வேண்டும். அவன் தனக்கு அருளியிருக்கும் திறன்களுக்கு ஏற்ப பொறுப்புகளை ஏற்பது பற்றியும், தன்னுடைய ஒவ்வொரு செயலுக்கும் நாளை மறுமையில் கேள்வி கேட்கப்படும் என்ற பொறுப்புணர்வு பற்றியும் தெளிவுடன் செயற்பட வேண்டும்.சிகிச்சைக்கான ஆய்வுகளாக நபியவர்கள் பின் வருவன வற்றைக் கூறுகிறார்கள்.நபி (ஸல்)கூறினார்கள், “அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை. ” (புகாரி)அழுக்கு படிந்த ஆடையை அணிந்திருந்த ஒருவரைப் பார்த்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அவரிடம் தனது ஆடையைத் துவைப்பதற்கு எதுவும் இல்லையா? என்று கடிந்து கொண்டார்கள். (மிஷ்காத்) ஒரு நாளைக்கு ஐந்து நேரத்தொழுகையைக் கடமையாக்கியது மட்டுமல்ல, ஒவ்வொரு தொழுக்கு முன்பும் உளு எனும் கை, முகம், கால்களைக் கழுவும் முறையையும் கட்டாயமாக்கியிருக்கிறது, இஸ்லாம். பல் துலக்கும் கலாச்சாரத்தை கடமையாக்காத குறையாக வலியுறுத்தியுள்ளது.மக்களுக்கு சிரமமில்லையானால் ஒவ்வொரு தொழுகையின் போதும் பல் துலக்குவதை கட்டாயமாக்கியிருப்பேன், என்று முஹம்மது (ஸல்) அவர்கள் போதித்தார்கள். பல் துலக்குவது வாயைச் சுத்தப்படுத்தவது மட்டுமல்ல் இறைப் பொருத்தத்தையும் தேடித்தரும் என்று நபியவர்கள் கூறி அதையும் இறைவழிபாட்டின் வரிசையில் இணைத்தார்கள். (புகாரி – 1933)சாப்பாட்டுக்கு முன்பு கை கழுவிக்கொள்ள வேண்டுமென்பதும் இஸ்லாம் போதிக்கும் சுகாதாரக் கொள்கைகளில் ஒன்று. உணவருந்தும் முன்பும் பின்பும் கைகழுவிக் கொள்வது சாப்பாட்டில் அபிவிருத்தியை உண்டாக்கும் என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள். (அபூதாவூத் – 3763)நகஇடுக்குகளில் அழுக்கு படிவதால் அது உணவருந்தும் போது அழுக்கும் உடலுக்குள் சென்று உடல்நலத்ததைக் கெடுக்கக் கூடும். எனவே, இது போன்ற காரியங்களிலும் இஸ்லாம் கவனம்செலுத்தியிருக்கிறது. நகத்தை வெட்டுவதையும் இடுக்குகளில் உள்ள முடிகளைக் கலைவைதையும் மனிதனுடைய இயல்பான காரியங்களில் உள்ளவை என்று கூறி நபியவர்கள் உடல் சுத்தத்தின் முக்கியத்துவத்தை உலகுக்கு உணர்த்தியுள்ளார்கள். நாற்பது நாட்களுக்கு அதிகமாக அவற்றை அகற்றாமல் விட்டுவைக்கக்கூடாது, என்று காலக்கெடுவையும் கண்டிப்புடன் கூறியுள்ளார்கள். (திர்மிதி – 2758)தண்ணீர் பாத்திரத்தை மூடி வையுங்கள். தண்ணீர்ப் பையைக் கட்டி வையுங்கள். தூங்கிவிழித்தால் தண்ணீர்ப் பாத்திரத்திற்குள் கைகளை நுழைப்பதற்கு முன் மூன்று முறை கைகளைக் கழுவிக்கொள்ள வேண்டும். இரவு நேரங்களில் அவனுடயை கரங்கள் (அசூசையான இடங்களில்) உலாவிஇருப்பதை அவன் அறியமாட்டான் என்று கூறி தண்ணீரின் தூய்மையைப் பேணுவதில் கவனம் செலுத்தியிருக்கிறார்கள், நபியவர்கள். நாகரிகம் தெரியாத அந்தக் காலத்திலேயே அதிகமாக செருப்பணியுங்கள், என்று நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். (ஸஹிஹ் முஸ்லிம்)செருப்பின் மூலம் கிருமிகளின் தாக்கத்தை விட்டும் பாதுகாப்புப் பெற முடியும். தண்ணீரில் நாய் வாய் வைத்துவிட்டால் அந்த பாத்திரத்தை ஏழுமுறை கழுவுங்கள். ஒரு முறை மண்ணால் தேய்த்து கழுவுங்கள். இவையனைத்தும் இறைத்தூதர் போதிக்கும் சுக ஆதாரங்களில் சிலஅன்றைய கால ஸஹாபாக்கள் கத்ர், ஈமான் எல்லாவற்றையும் அவர்கள் மாற்றிக் கொள்ளாமல் கடைபிடித்து வந்தார்கள்.அன்று ஆட்சியாளர்களை அழைப்பு விடுத்து வரவேற்று அவர்களுக்கு மரியாதை செய்தார்கள் இன்று ஆட்சியாளர்கள் வருவதையே விரும்புவதில்லை.சஹாபாக்கள் பலர் நோயினால் இறந்துள்ளார்கள் அவர்கள் நோய் பிடிக்கப்பட்ட ஊரை விட்டு ஓடவில்லை எது நடந்தாலும் இறைவன் நாட்டப்படி நடக்கும் என்ற உறுதியுடன் இருந்தார்கள். நாம் ஆரம்ப கால இஸ்லாமிய வரலாற்றை நோக்கினால் நபித்தோழர்கள் உடைய இறை நம்பிக்கையை அறிந்து கொள்ளக்கூடியதாக காணப்படுகிறது. எனவே நாமும் அவர்களைப் போன்ற இறை நம்பிக்கை உடையவர்களாக காணப்படவேண்டும்.“ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது; அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்” என்று (நபியே!) நீர் கூறும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக! (தவ்பா 51).எது நடந்தாலும் அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படி தான் நடைபெறுகிறது என்ற நம்பிக்கையில் நாம் வாழ வேண்டும் எனவே தொற்றுநோய் என்பது இஸ்லாமிய வரலாற்றில் காணப்பட்டிருக்கிறது அதனை நபியவர்கள் மேற்கூறப்பட்ட முறையில் அணுகி உள்ளார்கள் என்பதை விளங்கி நாமும் அதனடிப்படையில் வாழ வேண்டும்.அல்லாஹ் நம் அணைவரையும் இது போன்ற கொடிய நோய்களில் இருந்து பாதுகாப்பானாக.
A.L.F Nuskiya
South Eastern University of Sri Lanka
#வழித்தடம்#the_path#aumsa#aumsa_articles#T0001
Similar Posts:
- கட்டுரை இல: T0003 அல்குர்ஆன் ஓர் அறிவியல் நூல் என்ற வகையில் அதன் மீதான எமது கடமைகள்
- கட்டுரை இல: T0002 முஸ்லிம்களின் முன்மாதிரியான பெருநாள்
- Spade to Shade 2020
- The Massive independent day campaign
- 1000 Home Gardening Project